About Me

My photo
I am a Architect as a profession who loves his family and country. This is the space i can share my feelings with my friends like u :)
Powered By Blogger

Wednesday, December 14, 2011

நினைவுகள்

எப்போதும் படுத்தவுடன் தூங்கி விடும் நான்... நேற்று தூங்க முடியவில்லை. காரணமும் தெரியவில்லை. படுக்கையில் புரண்டேன்.. கண்களை இறுக மூடினேன். தூக்கம் கண்களுடன் சடுகுடு ஆடுகிறது. நிசப்தமான வீடு, இதமான குளிர். மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது. நேரம் ஓடுகிறது. தூக்கம் வரவில்லை.
மெதுவாக எழுந்து கதவினை திறந்து சாலையில் நடக்கிறான். நிர்மலமான சாலை. நிர்மலமான வானம். இதமான காற்று. எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.. அரை மணிநேரம் நடந்த பின் வீட்டிற்கு வருகிறேன். வராத தூக்கம் வரவைக்கும் அற்புத மதுவை நாடுகிறேன்.
கோப்பையில் மதுவை சரித்து கொண்டு வாசல் வருகிறான். அலை பேசியில் பாடல்களை ஒலிக்கவிட்டேன். பாடல் காதில் இறங்கி மனதில் ஒலிக்க ஆரம்பித்தது. பின் கடந்த களத்தில் சிறிது வட்டமிட்டது. நான் கற்றது, பெற்றது, இழந்தது... எல்லாம் நினைவில் வந்தது. என் 31 வயது முடிய இன்னும் சில நாட்களே உள்ளது.. எனவே ஒரு சீரிய நினைவுட்டல்.